Thursday, 27 June 2013

ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதி !

ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதி !


ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா.


ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை இடையறாது துதித்து வருவோர் தம் வாழ்வில் எத்தகைய ஏற்றத்தை எண்ணி விடா முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறாரோ அந்த நிலையை விரைவில் அடைவர்.


மேலும் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியின் திருநாமத்தை உச்சரிப்பது, ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியின் திருஉருவத்தை தரிசிப்பது, ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியின் அவதார மகிமையை கேட்க ,படிக்க முன் ஜென்ம புண்ணியம் மற்றும் இறை சிந்தனை அமைப்பு இருந்தால் மட்டுமே, ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியின் அருள் அமுதம் பெற முடியும். 


அத்தகைய வழியினிலே, இன்று ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் ஆலயம் பற்றிய இந்தத் தகவல் , இதைப்படிக்கும் யாவருக்கும் நல்ல நிமமதியையும் மனதில் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.


ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி, கலியுகத்தின் கண்கண்ட தெய்வம், இன்றைய சமூக வாழ்வியல் சூழலில் சிக்கித்தவிக்கும், நம் மக்கள் தம் குறை தீர்க்க நமக்கு கிடைத்த சர்வ ரோக நிவாரணி தான் நம்மை உய்விக்க வந்த      ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.

கருணைக்கடலாகிய ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் அருள் அள்ள அள்ளக் குறையாத கற்பக மேரு. எண்ணற்ற அரும்பெரும் ஆற்றலை நமக்குத்தரும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை அதிகாலையில் வணங்கி வந்தால் மூலாதாரம் சரிவர இயங்கும், காரிய சித்தியும் குடும்ப வாழ்வில் அமைதியும் வளமும் ஏற்படும்.

அதிகாலை எழுந்து குளித்துவிட்டு,காலை 6 மணி முதல் 6.40 க்குள் திருநீறு அணிந்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் நாமத்தை மனதிற்குள் ஜெபித்து வர, அனைத்து ஐஸ்வரியமும், சுபிட்சமும் உண்டாகும்.

தினமும் உச்சரிக்க வேண்டிய ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி அருள் மந்திரம்.

ஸ்ரீ உச்சிஷ்டகணேசாய நமோ நமஹ