Monday, 22 July 2013

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்




எடுத்த காரியங்களில் வெற்றி, அடைய அஞ்சனை மைந்தன் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரைத் தொழுது அவரடி பணிந்தால், அவர் நம்மை காத்து,
நற்காரிய வெற்றியை அளிப்பார்.

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை அமாவாசை தோறும் வணங்கி வர, மூதாதையர் சாபம் நீங்கி நல் வாழ்வு பெறலாம்.

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை புதன் கிழமைகளில் வணங்க ஞானமும், பவுர்ணமி நாட்களில் வணங்கி வர, நற்செல்வமும் வந்து சேரும்!

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை துதித்து வணங்கிக்கூற வேண்டிய மந்திரம்,

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயாய நமோ நமஹ


ஸ்ரீ ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்

சந்நிதி

திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.


ஸ்ரீ சக்கராத்தாழ்வார்

காக்கும் கடவுள் ஸ்ரீ சக்கராத்தாழ்வார்

கலியுகத்தில் மனிதன் , பிறவிப்பெருங்கடல் சுழலில் சிக்கி, சிறு துரும்பு கிடைக்காதா கரை சேர, என ஏங்கித்தவிக்கும் வேளையில், நான் இருக்கிறேன் உனக்கு , நீ நினைக்கும் துரும்பாக இல்லை, ஆழ்கடலில் நிம்மதியாக வழிநடத்தி உன்னைக் கரை தேற்றும் ஞானக்கப்பலாக, என கலியுக மாந்தர் அனைவரையும், அரவணைத்துக் கடைத் தேற்றும் அற்புத காக்கும் தெய்வம் தான் ஸ்ரீ சக்கராத்தாழ்வார். 

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை சரணாகதி அடைந்து அவர் தம் தாழ் பணிந்தால், நம் பாவ வினைகளைப் போக்கி, நல் வாழ்வு அமைத்துக்கொடுத்து , நற்கதி அளிப்பார்.

கலியுகக் காவல் தெய்வம் ஸ்ரீ சக்கராத்தாழ்வார் , இப்பிறவியில் நாம் அறியாமல் செய்த பாவத்தை அழித்து நம்மைக் காப்பார். மேலும், அல்லலில் சிக்கித்தவிக்கும் மனிதனுக்கு தேவைப்படும் ஆத்ம பலம், மனோ பலம்,திட பலம்,உடல் பலம் மற்றும் உள்ள பலம் அளித்து அஞ்ஞான இருள் அகற்றி நல் வாழ்வு பெற அருள் புரிவார்.

இப்பிறவி பாதிப்புகளை அகற்றி மனிதனை , நல்வாழ்வு வாழ அருள் புரியும் கலியுகக் காக்கும் தெய்வம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், பத மலர்களில் சரணடைவோம்,ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அருள் பெற்று அற்புத வாழ்வு அடைவோம்!

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அருள் பெற தினமும் காலை வேளைகளில் , அவரை வணங்கி உச்சரிக்க வேண்டிய திரு மந்திரம்,


ஸ்ரீ சுதர்சன அஸ்திராய பட்

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சந்நிதி

திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.

Friday, 5 July 2013

ஸ்ரீ திருவடி

சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்  352/2012

5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.

 ஸ்ரீ திருவடி

பாற்கடலில் பள்ளி கொண்டருளும் எம்பெருமானின் திருவடியை சரணடைந்தால் , நல்ல எண்ணம், நல்ல சிந்தனை சிந்தையில் ஈடேறும்,மனதில் நல்ல செயல் செய்ய உத்வேகம் உருவாகும்.
நற்காரியம் இனிதே, நிறைவுற, எம்பெருமான் திருவடி சரணம்!


ஸ்ரீ திருவடி சந்நிதி


திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.

ஸ்ரீ குருவாயூரப்பர்

சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்  352/2012

5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.






                                        உலகினில் மனதில் உள்ளார்த்தத்தோடு பிரார்த்திக்கும் அனைவருக்கும் , பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தரும் கலியுக தெய்வம், 
ஸ்ரீ குருவாயூரப்பர்.

கல்வி,ஞானம்,செல்வம்,புகழ், அந்தஸ்து,தொழில், உத்யோகம் அமைத்துத்தரும் ஸ்ரீ குருவாயூரப்பரை துதித்து பிரார்த்தனை செய்வோம்!

வாரந்தோறும் புதன் கிழமை காலை 6 - 7 க்குள் , குருவாயூரப்பரை வணங்கி , பூசை செய்து, பிரார்த்திக்க வேண்டிய ஸ்ரீ குருவாயூரப்பர் மந்திரம் 

ஸ்ரீ ஹரி நாராயணா நமோ நமஹ

பிறகு, அனுதினமும், ஸ்ரீ குருவாயூரப்பர் மந்திரம் 108 தடவை மனதில் உச்சரித்து பிரார்த்தனை செய்ய, பிரார்த்தனை செய்யும் அனைத்து காரியங்களும் இனிதே நடத்திக்கொடுப்பார், கலியுகக் கண் கண்ட தெய்வம், ஸ்ரீ குருவாயூரப்பர்.

ஸ்ரீ குருவாயூரப்பர்

சந்நிதி

திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.

ஸ்ரீ யோஹ நரசிம்மர்

சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்  352/2012

5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.
ஸ்ரீ யோஹ நரசிம்மர்



கலியுகத்தில் எம பயம்,பித்ரு பயம்,சத்துரு பயம், ருண பயம் [ பிறவிக் கடன் ] மற்றும் பணக்கடன் பிரச்னையில் சிக்கி உளழும் யாவருக்கும் அக்கடன் பிரச்னையை நல்ல முறையில் தீர்க்க அருள் புரிவார் ஸ்ரீ யோக நரசிம்ஹர்.

மேலும், மானிடப்பிறவியின் நல் வாழ்வு பலனை நேரிய வழியில் அனுபவிக்க ,அல்லல் தரும் வாழ்வியல் துயரில் சிக்கி வாடும் மனிதர்களைப் பிறவிப்பிணியிலிருந்து காக்க, கலியுக தெய்வம்,காக்கும் கடவுள் ஸ்ரீ யோஹ நரசிம்மர்  வழிபாடு நம்மை உய்விக்கும்.

ஸ்ரீ யோஹ நரசிம்ஹாய நமோ நமஹா

எனும் ஸ்ரீ யோஹ நரசிம்மர் மூல மந்திரத்தை , வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதும் , முக்கிய காரியங்களின் போதும் 12 முறை மனதார உச்சரித்து வர, அனைத்து காரிய வெற்றி மற்றும் நற்பலன்கள் ஏற்படும்.
வெள்ளிக்கிழமை தோறும் உச்சரித்து வர, ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகி , குடும்ப நிம்மதி , மன சந்தோசம் ஏற்படும்.

* * * 
                                                        
ஸ்ரீ யோஹ நரசிம்மர் சந்நிதி
திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.

Thursday, 4 July 2013

ஸ்ரீ புருஷ கேசரி மகா பீடம்

சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்  352/2012

5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.


கலியுகத்தில் கண் கண்ட தெய்வம், 
சர்வ காரிய சித்தி தரும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி!

ஸ்ரீ யோஹ நரசிம்மர்
ஸ்ரீ குருவாயூரப்பர் 
ஸ்ரீ திருவடி

திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.